திமுக குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அறிவுரையை மீறி செயல்படுவது தவறு என்றும், இது குறித்து டெல்லி மேலிடத்துடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.