பாகிஸ்தானில் கார் சீட் பெல்ட் பழுதடைந்ததால் போக்குவரத்து அபராதத்தைத் தவிர்க்க ஒரு நபர் தனது கால்சட்டை பெல்ட்டையே சீட் பெல்ட்டாகப் பயன்படுத்திய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மற்றொரு நபர் அவரிடம் அபராதம் குறித்து எச்சரிக்கும்போது தான் ஏற்கனவே பெல்ட் அணிந்திருப்பதாகக் கூறி தனது மார்புக்குக் குறுக்காகக் கட்டியிருந்த கால்சட்டை பெல்ட்டைக் காட்டியது காண்போரை வியப்படையச் செய்ததுடன் பாகிஸ்தான் இத்தகைய தற்காலிக ஏற்பாடுகளிலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக அவர் பெருமையுடன் பேசும் காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.
இது ஒருபுறம் வேடிக்கையாகத் தெரிந்தாலும் விபத்து காலங்களில் கால்சட்டை பெல்ட் எவ்வித பாதுகாப்பையும் வழங்காது என்றும் இத்தகைய செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது என்றும் சமூக வலைதளவாசிகள் பலர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
