ஹோங்காங்கில் உள்ள ஒரு வினோத உணவகத்தில் சிக்கன் அல்லது மட்டனுக்குப் பதிலாக விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் உணவாகப் பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், கடந்த 50 ஆண்டுகளாக ஒரு பெண்ணால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் மரப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாம்புகளை வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவாறு தேர்வு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Violetta Magpie (@magpie_vi)

பொரிக்கப்பட்ட அல்லது வேகவைக்கப்பட்ட நாகப்பாம்பு உணவின் விலை இந்திய மதிப்பில் 16000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாகவும், பாம்பின் உறுப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் அங்கு ஆரோக்கிய பானமாக வழங்கப்படுவதாகவும் அந்தப் பயணி தெரிவித்துள்ளார்.

ராஜநாகத்தை ஜெல்லி போன்ற சூப் வகையுடன் சேர்த்துச் சாப்பிட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள இந்த வீடியோவை இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், உலகில் உணவிற்கா பஞ்சம் வந்துவிட்டது என்று இணையவாசிகள் பலரும் தங்களது அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.