ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என அடம்பிடித்த பாகிஸ்தான் அணி, இறுதியில் களமிறங்கி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கம்பீரமாக சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, கொழும்பில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்தியாவை எதிர்கொள்ள மாட்டோம்” என வாரக்கணக்கில் வீராப்பு பேசிய பாகிஸ்தான், இறுதியில் வேறு வழியின்றி பணிந்துபோய் களம் இறங்கியது. ஆனால், மைதானத்தில் அவர்கள் காட்டிய ஆட்டம், “பேசாமல் வாக்-அவுட் செய்திருக்கலாமோ” என்று அந்நாட்டு ரசிகர்களையே நினைக்க வைத்துள்ளது.
https://twitter.com/HaramiParindey/status/2023061995172647258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2023061995172647258%7Ctwgr%5E3452ebd107dbc4e04bb60917f95c23273b1ed009%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-42127263771491153186.ampproject.net%2F2601162341000%2Fframe.html
பிரேமதாசா மைதானத்தின் சவாலான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு இஷான் கிஷன் தூணாக நின்றார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (0) ஏமாற்றினாலும், இஷான் கிஷன் வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து இந்தியாவை 175/7 என்ற வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.
https://twitter.com/Ctrlmemes_/status/2023061941498060863?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2023061941498060863%7Ctwgr%5E42de65c41649de591c4e31fa4fa504af51ba1759%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-42127263771491153186.ampproject.net%2F2601162341000%2Fframe.html
176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், இந்தியப் பந்துவீச்சின் வேகத்தில் நிலைகுலைந்தது. பவர்பிளே ஓவர்களிலேயே டாப்-4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பேரிடியாக அமைந்தது. குறிப்பாக பாபர் அசாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனது அந்த அணியின் நம்பிக்கையை உடைத்தது.
https://twitter.com/firki07/status/2023052462496915624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2023052462496915624%7Ctwgr%5E1906d52e3141a32d9347e61ecc7048cb1111925f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-42127263771491153186.ampproject.net%2F2601162341000%2Fframe.html
இந்தியப் பந்துவீச்சாளர்கள் கூட்டு முயற்சியால் பாகிஸ்தானை திணறடித்தனர். இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. வெற்றிக்கு முன்பே வீராப்பு பேசிய பாகிஸ்தான் வாரியத்தையும், களத்தில் சொதப்பிய வீரர்களையும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது மற்றுமொரு கருப்புப் பக்கமாக இணைந்துள்ளது.
https://twitter.com/sagarcasm/status/2023074391303819347?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2023074391303819347%7Ctwgr%5E57275a9176471e38c0f6fda785397725461a1751%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-42127263771491153186.ampproject.net%2F2601162341000%2Fframe.html
