டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அக்தர் கூறியதாவது:
“நீங்கள் இந்தியராக இருந்தாலும் சரி, பாகிஸ்தானியராக இருந்தாலும் சரி, ஒரு உண்மையை ஒப்புகொண்டுதான் ஆகவேண்டும். இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன்தான் களமிறங்கியுள்ளது. அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அது இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவால் மட்டுமே முடியும் என்றார்.
#BREAKING | ‘इंडिया की टीम वर्ल्ड कप जीतने ही आई है’ – शोएब अख्तर@romanaisarkhan | @MohammadKaif https://t.co/smwhXUROiK#ABPNews #T20WorldCup2026 #IndVsPak #IshanKishan #MohammadKaif pic.twitter.com/MWKhccwtzK
— ABP News (@ABPNews) February 15, 2026
“இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி எங்குமே ஆதிக்கம் செலுத்தவில்லை. எங்களுக்கு ஷாகீன் அப்ரிடி பேட்டிங்கில் எடுக்கும் 23 ரன்கள் தேவையில்லை, அவரிடமிருந்து விக்கெட்டுகளையே எதிர்பார்க்கிறோம். அவர் மணிக்கு வெறும் 125 கி.மீ வேகத்தில் மட்டுமே பந்துவீசுகிறார். இது கவலையளிக்கிறது.”
“பாகிஸ்தான் விளையாடும் விதம் தற்கால நவீன கிரிக்கெட்டிற்குச் சற்றும் பொருந்தாது. பாகிஸ்தான் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால், இந்தியாவோ இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிந்தைய நவீன கிரிக்கெட்டை இப்போதே விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டது” என அக்தர் வேதனையுடன் தெரிவித்தார்.
