சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,15,520 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15753 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,024 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.