புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அம்மாநில முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.
வரவிருக்கும் தேர்தலுக்காக என்டிஏ (NDA) கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
