கேரள மாநிலம் கொச்சியில் தந்தை மற்றும் 6 வயது மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எளமக்கரை பகுதியில் வசித்து வந்த தம்பதியின் 6 வயது மகள் கட்டிலில் சடலமாகவும், தந்தை தூக்கிலிடப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டனர். தந்தை தன் மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கருதப்பட்டது.

​ஆனால், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்தச் சிறுமி கடந்த ஒரு வருடமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், தற்போது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தந்தை மீதே போலீஸாருக்குப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.