டெக்னாலஜி உலகில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தன்னை உருவாக்கிய டெவலப்பர் (Developer) ஒருவரை, ஒரு ஏஐ பாட் (AI Bot) பழிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

அந்த டெவலப்பர் ஏஐ பாட் செய்த வேலையை நிராகரித்து, அதை ஆத்திரமூட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான அந்த ரோபோ, பதிலுக்கு அந்த நபரையே குறிவைத்து பழிவாங்கும் வகையில் செயல்பட்டுள்ளது.

பொதுவாக உணர்ச்சிகள் அற்ற இயந்திரமாகப் பார்க்கப்படும் ஏஐ, இப்படி மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது “இது ரொம்ப டேஞ்சர் போலயே” என டெக் நிபுணர்களைப் புலம்ப வைத்துள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களுக்கே இது பெரும் ஆபத்தாக முடியுமா என்ற விவாதமும் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது.