சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம் ரத்தத்தையே உறைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ‘thearajak’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

ஒரு ஆள் நடமாட்டம் உள்ள சாலையோரத்தில், மூன்று நான்கு பெரிய பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு விசித்திரமான முறையில் நடனமாடுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Amarjeet Rajak (@thearajak)

பொதுவாகப் பாம்புகளை ஒரு ஜோடியாகப் பார்ப்பதே அரிது எனும் நிலையில், இப்படி ஒரு கூட்டமாகப் பாம்புகள் ஒன்றிணைந்து இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த சிலர், “இது ஏதோ கடவுளின் அதிசயம்” எனக் கூறினாலும், விலங்கியல் ஆர்வலர்களோ, “இது பாம்புகளின் இனப்பெருக்க காலத்தின் போது நடக்கும் ஒரு இயல்பான நிகழ்வு” என விளக்கம் அளித்துள்ளனர். எது எப்படியோ, கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த பாம்புகளின் ‘டான்ஸ்’ வீடியோ இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்.