பொதுவாக மனிதர்கள் தான் பற்களை வெள்ளையாக்க டென்டிஸ்ட் கிட்ட ஓடுவாங்க, ஆனா இங்க ஒருத்தர் தன் வீட்டு எருமை மாட்டுக்கே ‘டென்டல் கேர்’ கொடுத்து அசத்தியிருக்காரு. இன்ஸ்டாகிராமில் ‘aaminmagic’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஆரம்பத்தில் அந்த எருமையின் பற்கள் மிகவும் அழுக்காகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது.

உடனே அதன் உரிமையாளர், துணி துவைக்கும் பிரஷ்ஷில் பேஸ்ட்டை தடவி, எருமையின் பற்களைத் தேய்த்து தேய்த்து பளிச்சென மாற்றுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த எருமை தன் வாயைத் திறந்து காட்ட, அதன் பற்கள் அப்படியே முத்துப்போல ஜொலிக்கிறது.

எருமை மாட்டின் அந்த ‘பளீச்’ சிரிப்பைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன எருமையா இல்ல கோல்கேட் விளம்பர மாடலா?” என கிண்டல் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aamin Mansuri (@aaminmagic)

“இவ்ளோ வெள்ளையா சிரிப்பு வர நாமளும் எருமை மாடு தேய்க்கிற பிரஷ்ஷை தான் பயன்படுத்தணுமோ?” என கமெண்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. சுமார் 76 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இந்த வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.