மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல ‘இயற்பியல் வாலா’ பயிற்சி மையத்தில், மராத்தி மொழியை அவமதித்ததாகக் கூறி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை கட்சியினர் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

மேலும் அந்த மையத்தின் ஊழியர் ஒருவர் மராத்தி மொழியைத் தவறாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், கோபமடைந்த மன்சே கட்சியினர் சம்பந்தப்பட்ட ஊழியரைச் சரமாரியாகத் தாக்கியதோடு, அவரை மன்னிப்புக் கேட்கவும் வற்புறுத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்சே தொண்டர்கள், “மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு மராத்தி மொழியை அவமதிப்பதை சகித்துக் கொள்ள முடியாது” என்று எச்சரித்தனர். இந்த மோதலால் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது.

இதனால் உள்ளூர் மொழிகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த உணர்வுகள் அரசியல் ரீதியாக எவ்வளவு தீவிரமானவை என்பதை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் மொழிப்பற்று தொடர்பான இத்தகைய மோதல்கள் பேசுபொருளாகியுள்ளன.