பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை, சமூகக் கட்டுப்பாடுகளையும் குடும்ப எதிர்ப்பையும் மீறி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊரிலேயே வசிக்கும் ஒரு இளைஞனை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த அந்த ஆசிரியை, ஒரு கட்டத்தில் தனது வேலையைத் துறந்துவிட்டு அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளான நிலையில், அவரது பாதுகாப்பு மற்றும் முடிவு குறித்துப் பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்தன. தங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடும் அல்லது குடும்பத்தினர் இடையூறு விளைவிக்கக்கூடும் என்பதை உணர்ந்த அந்த ஆசிரியை, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

“>

அதில், தான் எவருடைய கட்டாயத்தின் பேரிலும் வரவில்லை என்றும், முழு மனதுடன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் காதலனைத் திருமணம் செய்துகொண்டதாகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். “நான் இப்போது ஒரு மேஜர், எனக்கு என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு” எனக் கூறியுள்ள அவர், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.