மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக்கோப்பை தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை நோரா பதேஹியின் அதிரடி நடனம் நடைபெற்றபோது, இந்திய அணி வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தங்களின் ஆட்ட வியூகங்களை விடுத்து, பால்கனிக்கு வந்து அந்த நடனத்தை ரசித்தனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட ஆர்வத்துடன் எட்டிப் பார்த்த நிலையில், இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ஒருகட்டத்தில் நோராவின் நடனத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா, சூர்யா நோராவின் நடனத்தை உற்றுப் பார்ப்பதைக் கவனித்துவிட்டார்.
In the opening match of the T20 WC, Nora Fatehi was performing a dance.
Instead of sitting inside the dressing room, Indian players were watching her dance from balcony. 😄
Just then, Surya’s wife spotted them — and after that, everyone’s reaction was absolutely priceless! 🤣🤣 pic.twitter.com/KMJ250iMIw
— Jara (@JARA_Memer) February 12, 2026
தேவிஷா தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சூர்யா ஒரு கணம் பதற, அருகில் இருந்த இஷான் கிஷன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிரிப்பை அடக்க முடியாமல் கிண்டல் செய்தனர். இந்த சுவாரசியமான தருணத்திற்குப் பிறகு மைதானத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்டத்தில் ‘ஹீரோ’வாக இருந்தாலும், மனைவியிடம் ‘ரெட் ஹேண்டாக’ சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
