உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய ஒரு கொடூரமான வேட்டை சம்பவம், இப்போது இணையதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நள்ளிரவில் ஊடுருவிய சிறுத்தை ஒன்று, அங்கு ஒரு வீட்டின் வாசலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை குறிவைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by बजरंगदल_चमोली विभाग ॐ🚩 (@rudraprayag_sanatani)

பூனை நடையில் பதுங்கி வந்த அந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் நாயின் கழுத்தைப் பிடித்துக் கவ்வியது. நாய் சுதாரித்து கத்துவதற்குள் அதன் கதையை முடித்த சிறுத்தை, மின்னல் வேகத்தில் நாயைத் தூக்கிக் கொண்டு இருட்டில் மறைந்தது.

இந்த மொத்த காட்சியும் அங்கிருந்த ஒரு நபரால் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அதே சமயம், “வீடியோ எடுத்தவர் நினைத்திருந்தால் சத்தம் போட்டு நாயைக் காப்பாற்றி இருக்கலாம்” என நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். வீட்டு வாசலிலேயே நடமாடும் இந்தச் சிறுத்தையால் ருத்ரபிரயாக் பகுதி மக்கள் இப்போது கடும் பீதியில் உள்ளனர்.