தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் சசிகலா தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக களம் காணத் திட்டமிட்டுள்ள அவர், குறிப்பாக தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்து களம் இறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் அ.ம.மு.க. நிர்வாகி ஜீவிதா நாச்சியார் சசிகலாவை சந்தித்ததற்காக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தினகரன் மற்றும் சசிகலா இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தனது முக்கிய ஆதரவாளர்களுக்குச் சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கிறீர்களா எனத் தனது ஆதரவாளர்களிடம் அவர் கருத்து கேட்டு வருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி.
மேலும் தினகரன் இணைந்ததை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. நீண்ட காலமாகத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
