மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், காலை பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது பள்ளி வாகனத்தைப் பிடிக்கச் சென்றபோது, அங்கிருந்த நான்கு ஐந்து நாய்கள் திடீரென ஆக்ரோஷமாக அவரை நோக்கி ஓடி வந்தன.

பயந்துபோன சிறுமி அலறியபடி ஓட, நாய்கள் அவரைச் சூழ்ந்து கடிக்க முயன்றன. அப்போது அங்கு பணியிலிருந்த பாதுகாவலர், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாகக் கையில் தடியுடன் ஓடி வந்து நாய்களை விரட்டினார். அவரது துரிதமான செயலால் அந்தச் சிறுமி பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமிக்குக் காயம் ஏற்படவில்லை என்றாலும், அவர் இந்தச் சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பாதுகாக்கப்பட்ட ஒரு பெரிய குடியிருப்பிற்குள் நாய்கள் எப்படி சுதந்திரமாக உலவுகின்றன என்று அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“>

 

மேலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.