சமூக வலைதளங்களில் தற்போது வினோதமான உணவு சவால்கள் (Food Challenges) ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு பெரிய ‘ராட்சச கோல்கப்பாவை’ உடைக்காமல் அப்படியே வாய்க்குள் வைக்க வேண்டும் என்ற சவாலில் பங்கேற்ற ஒரு முதியவரின் வீடியோ இணையத்தில் பலரது சிரிப்பைத் தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெரிய கோல்கப்பாவை கையில் எடுக்கும் அந்த அங்கிள், அதை வாய்க்குள் திணிக்க முயற்சி செய்கிறார். காரமான தண்ணீர், மசாலா மற்றும் சட்னிகள் நிறைந்த அந்தப் பெரிய கோல்கப்பா, அவர் வாய்க்குள் செல்வதற்கு முன்பே உடைந்து சிதறுகிறது.
எதிர்பாராத விதமாக கோல்கப்பா உடைந்ததால், அதிலிருந்த காரமான தண்ணீரும் சட்னியும் அங்கிள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஸ்வெட்டர் முழுவதும் கொட்டி, ஒரே நொடியில் அவரது உடையை வண்ணமயமாக மாற்றிவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த மக்கள் கைதட்டி சிரிக்க, அங்கிள் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் நெளிவது பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ‘foody_rahul_’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, “ஆசைப்பட்ட கோல்கப்பா கடைசியில் இப்படி ஆப்பு வைக்கும்னு அவர் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டார்” என்ற கமெண்டுகளுடன் வைரலாகி வருகிறது.
