தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசத் தொடங்கினால், மற்ற எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆட்டம் முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதைப் பற்றிப் பேச வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். சரியான நேரத்தில் அவர் தனது கருத்துகளை முன்வைப்பார்.

விஜய் பேசும் அந்த நாள், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஒரு முக்கிய நாளாக அமையும் என மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் சூழலில், தவெக நிர்வாகியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2026 தேர்தலில் கண்டிப்பாக விஜய் தான் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணையில் அமருவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.