தருமபுரியில் தம்பியை அரிவாளால் வெட்டிவிட்டு, கையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு நபர் சாலையில் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன், தனது தம்பியை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதில் பலத்த காயமடைந்த தம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், தாக்குதல் நடத்திய அண்ணன் கையில் ரத்தக் கறையுடன் எவ்வித அச்சமுமின்றி சாலையில் நடந்து சென்றது காண்போரை உரைய வைத்தது. இந்த விசித்திரமான மற்றும் பயங்கரமான காட்சியைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த தம்பியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணனை உடனடியாகக் கைது செய்த போலீசார், மோதலுக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.