பொதுவாகப் பெண்கள் சேலை கட்டுவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், நபர் ஒருவர் வெறும் ஒரு நிமிடத்தில் மிக நேர்த்தியாகச் சேலை கட்டி அசத்தும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சேலையை மடிப்புக் எடுத்து, சொருகி, தோளில் முந்தானையைப் போட்டு முடிப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர். “இது என்ன மேஜிக்கா?” என்று கேட்கும் அளவுக்கு அவரது வேகம் மற்றும் நேர்த்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

​இந்த வீடியோவை பார்த்த பல பெண்கள், “எங்களுக்குச் சேலை கட்டவே அரை மணி நேரம் ஆகும், இவருக்கு இவ்வளவு வேகம் எப்படி?” என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு நிமிடத்திற்குள் இவ்வளவு கச்சிதமாகச் சேலை கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல என்று பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள், இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.