அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு ஒரு தீவில் நடக்கும் நிகழ்வில் இருவரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும், 2015-இல் தலாய் லாமாவை விருந்திற்கு அழைப்பது குறித்தும் எப்ஸ்டீனின் மின்னஞ்சல்களில் குறிப்புகள் இருந்தன.
இந்த ஆவணங்களில் டிரம்ப், பில் கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் பெயர்களும் ஏற்கனவே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை தலாய் லாமாவின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. புனிதத் தலைவர் தலாய் லாமா, ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் நேரில் சந்தித்தது இல்லை என்றும், அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொண்டது இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் தரப்பிலிருந்து வந்த எந்தவொரு சந்திப்பிற்கும் தலாய் லாமா ஒருபோதும் அனுமதி அளித்ததில்லை என்று அவரது தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
