உஸ்பெகிஸ்தானில் அமைந்துள்ள முருண்டாவ் தங்கச் சுரங்கம், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட தங்கச் சுரங்கமாகத் திகழ்கிறது. சுமார் 3.3 கி.மீ நீளமும், 2.5 கி.மீ அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்டமான திறந்தவெளி சுரங்கத்தில், கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 52 டன் ஏறத்தாழ 20 லட்சம் அவுன்ஸ் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் உஸ்பெகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவோய் சுரங்கம் மற்றும் உலோகவியல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்தச் சுரங்கம், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தச் சுரங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காகத் தனி விமான நிலையம் மற்றும் பிரத்யேக ரயில் பாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த இடத்தில், சுரங்கப் பணிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பரப்பிற்கு அடியிலும் நீண்ட தூரம் விரிந்துள்ள இந்தத் தங்கச் சுரங்கம், தங்கம் இருப்பிலும் உற்பத்தியிலும் உலக அளவில் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
