திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ஆம் தேதி முதல் தங்கி வந்தனர்.
இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி ழியர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாழ்க்கையில் ஏற்படும் நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தங்கள் தற்காலிகமானவை; அவற்றை எதிர்கொண்டு வாழ்வதே உண்மையான துணிச்சலாகும். தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்பதுடன், அது நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஆறாத வடுவையே விட்டுச் செல்லும்.
தற்போது இத்தற்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
