ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அவரது தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் பேரன் சாஹில் மற்றும் வேதிகா ஆகியோரது திருமணம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

குறிப்பாக, இத்திருமண விழாவில் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்துப் பேசினர்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் இந்த திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்த சந்திப்புகள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.