தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயுடன் பேசியபோது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

கச்சத்தீவு தாரைவார்த்தது, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்றவற்றை நாட்டிற்குள் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், அவர்களை வைத்துக்கொண்டு உருப்படியான அரசியல் செய்ய முடியாது என்று விஜயிடம் விளக்கியதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.