வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று எருமை மாட்டை வேட்டையாட முயன்றபோது, எதிர்பாராத விதமாக எருமைக் கூட்டத்திடம் சிக்கித் தப்பிக்க முடியாமல் மரம் ஏறிய வினோதக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டின் ராஜாவாகக் கருதப்படும் சிங்கம், தனது பசிக்காகத் தனியாக இருந்த எருமையை நெருங்கிய நிலையில், அங்கிருந்த எருமைக் கூட்டம் ஒன்று திரண்டு சிங்கத்தைத் தாக்கத் தொடங்கியது.

 

ஆக்ரோஷமான எருமைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறிய அந்த ஆண் சிங்கம், உயிர் பிழைப்பதற்காக அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது கிளைகள் முறியும் அளவிற்கு வேகமாக ஏறி அமர்ந்தது. வேட்டையாட வந்த சிங்கம் வேட்டையாடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்த அபூர்வ நிகழ்வு, ஒற்றுமையே பலம் என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.