பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பிப்ரவரி 6, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற தேர்வு பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் மொபைல் டேட்டா மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக மாணவர்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் இணைய வசதி என்பது அறிவுத் தேடலுக்கும், திறன் மேம்பாட்டிற்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அது மாணவர்களை அடிமைப்படுத்தும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்று அவர் எச்சரித்தார். மேலும், மாணவர்கள் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல், வாழ்க்கைத் திறன்களையும் வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டங்களில் நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து, இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “கல்வி என்பது ஒரு சுமையாக இருக்கக் கூடாது அது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான முழுமையான ஈடுபாடாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என வாழ்த்தினார்.