சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
“கூட்டணி கட்சிகளுக்குப் பதவி தரமாட்டார்கள், அவர்களுக்கு ஒரு ‘மிட்டாய்’ கொடுத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் ஸ்டைல்” என இபிஎஸ் விமர்சித்தார்.
அதாவது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராமல், சிறு சலுகைகளை மட்டும் கொடுத்து திமுக கட்டிப்போட்டுள்ளதாக அவர் சாடினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த திமுக தரப்பு, “எங்கள் கூட்டணி கொள்கை ரீதியானது, உங்கள் கூட்டணி போல மிட்டாய்க்காகவோ, மிரட்டலுக்காகவோ அமைந்ததல்ல” எனத் திருப்பி அடித்துள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, விஜய் (தவெக) வருகையால் ஒரு பக்கம் பரபரப்பு நிலவ, மறுபக்கம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதையே ‘மிட்டாய்’ விவகாரத்தோடு ஒப்பிட்டு அதிமுக அரசியல் செய்து வருகிறது.
