மதுரை: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பெயரைக் கூறி, மதுரை மாநகராட்சி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி மோசடி செய்த புகாரில், அவரது முன்னாள் நேர்முக உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகியோரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பே ஜெய் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, அமைச்சர் அவரைப் பணியிலிருந்து விடுவித்திருந்தார். இருப்பினும், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் பி.டி.ஆர். தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
