பரபரப்பான சாலையில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் அங்கும் இங்குமாக வளைத்து அதிவேகமாகச் சென்ற அந்த இளைஞர், இரண்டு லாரிகளுக்கு இடையே முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.
Driving Licence should be mandatory for buying a vehicle all over India pic.twitter.com/C1KA7oNv81
— 🚨Indian Gems (@IndianGems_) January 13, 2026
இதில் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் தலைக்கவசம் அணியாத நிலையில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு மணல் பரப்பில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து எங்கு எப்போது நடந்தது என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியாத நிலையில், இந்தியன் ஜேம்ஸ் என்ற சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இத்தகைய கவனக்குறைவான ஓட்டுநர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், இவர்களின் செயலால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
