தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு வார்த்தையில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தேமுதிக, பாமக தரப்பில் ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி இதனை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிட தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க tvkmanifesto2026.com என்ற புதிய இணையதள முகவரியை எந்த கட்சி தொடங்கியுள்ளது. மேலும் technology வளர்ந்து வரும் காலத்தில் ஏற்கனவே அந்த கட்சியின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைதளத்தில் புகுந்து விளையாடும் நிலையில் தற்போது தேர்தல் அறிக்கைக்காகவும் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
