நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. “தமிழ் பிச்சை எடுக்க உதவாது” என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழனின் தன்மானம் குறித்தும், தனது அரசியல் வழிகாட்டியான அண்ணா குறித்தும் அவர் ஆற்றிய உரை அவையில் அனல் பறக்கச் செய்தது.
மாநிலங்களவையில் பேசிய கமல்ஹாசன், “எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக்கொண்டேன்; அவர்களில் முக்கியமானவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா. மொழிக்கு எதிராக நடக்கும் எந்த ஆக்கிரமிப்பையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். 1967-லேயே எனது சித்தாந்தத்திற்கு அவர் வழிகாட்டியாக அமைந்தார். நான் கடவுளை நோக்கி கைகூப்பப் போவதில்லை; எனது பகுத்தறிவு மூளை பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுள் என்ற பிம்பத்தை அகற்றிவிட்டது,” என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் மொழி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நிதி திரட்ட உதவுவோர் தமிழைப் பார்த்து ‘பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான்; தமிழ் பிச்சை எடுக்கவும் உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவும் மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் ஒருபோதும் விற்க மாட்டான்,” என ஆவேசமாக முழங்கினார்.
கமல்ஹாசனின் இந்த உரையைக் கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “அன்புள்ள கமல் எம்.பி. அவர்களே! இது கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு. ஒரு தேசியவாதியின் மொழி, ஆனால் தமிழச் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும், ஆங்கிலம் கேட்டும். என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும். காடு அதிரட்டும் களிறே பிளிறு!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் எம்.பி அவர்களின்
நாடாளுமன்ற உரைக்கு
எனது பாராட்டும்
அவர் பேசி அனுப்பிய விடையும்“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சுஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;… pic.twitter.com/QlAj0d9zu9— வைரமுத்து (@Vairamuthu) February 5, 2026
