தேனி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில், சமூகப் பொறுப்பற்ற முறையில் பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

மதுபோதையில் இருந்த அந்த நபர், சக பயணிகள் மற்றும் பெண்கள் அமர்ந்திருக்கும் போதே, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு  மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“>

 

“இது என்ன பேருந்தா அல்லது பாரா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நபர் குறித்தும், பேருந்து நடத்துநர் ஏன் இதனைக் கண்டிக்கவில்லை என்பது குறித்தும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஓடும் பேருந்திலேயே அரங்கேறிய இந்த ‘குடி’மகனின் செயல் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.