சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில வீடியோக்கள் சிரிப்புடன் சேர்த்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. அந்த வகையில், தேனீக்கள் வளர்க்கும் பெட்டியைத் திறந்து தன்னைப் பெரிய நிபுணர் போலக் காட்டிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த நபர் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேனீ பெட்டியைத் திறக்கிறார். தான் பெட்டியைத் திறந்துவிட்டால் தனக்குச் சன்மானம் தர வேண்டும் என்று கேமரா முன்னால் சவால் விடுகிறார்.

ஆரம்பத்தில் தேனீக்கள் அமைதியாக இருப்பது போலத் தெரிந்தாலும், அடுத்த சில வினாடிகளில் ஒரு தேனீ அந்த நபரின் தலையில் நங்கென்று கொட்டியது.

தேனீ கொட்டிய அடுத்த நிமிடம், அந்த நபரின் மொத்த தன்னம்பிக்கையும் காணாமல் போனது. வலியால் அலறியபடி அவர் அந்தத் தோட்டம் முழுவதும் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இயற்கையோடு விளையாடினால் இதுதான் நடக்கும்” என்றும், “தேனீக்கள் அவருக்கு உடனே சன்மானத்தைக் கொடுத்துவிட்டன” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tumara Abhay (@tumara.abhay)

“>

பாதுகாப்பு இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நகைச்சுவையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.