பீகார் மாநிலம் பகார்பூர் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிவேகமாக வந்த ரயில் ஒன்று தண்டவாளத்தில் கிடந்த மரக்கட்டைகள் மீது மோதியதில், சிதறிய ஒரு பெரிய மரக்கட்டை அங்கிருந்த பெண் மீது பலமாகத் தாக்கியது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் மரக்கட்டைகளைத் தண்டவாளத்தில் விட்டுச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​இந்த மரக்கட்டைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, ரயில் நிலையத்தில் அவசரம் அவசரமாக இறக்கப்பட்டவை எனத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அதிகாரிகள் முன்னிலையிலேயே இவ்வளவு பெரிய அத்துமீறல் எப்படி நடந்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தண்டவாளத்தில் மக்கள் நடப்பதும், அதே சமயம் முறையற்ற வகையில் பொருட்களைக் கையாளுவதும் தொடர்கதையாகி வருவது கவலையளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.