வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவருக்கும் சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

ராஜேஷ் சலூன் கடை நடத்தி வருகிறார்.வழக்கம்போல் ராஜேஷ் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சங்கீதா தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இருந்துள்ளார். அப்போது நீண்ட நேரமாக குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையைத் தூக்கும்படி கூற சங்கீதாவின் அறைக்கு மாமியார் சென்றுள்ளார்.

அங்கு சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கீதாவிற்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால், இந்த தற்கொலைக்கான பின்னணியில் குடும்பத் தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.