தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் (NDA) 10 தொகுதிகளைக் கேட்டுள்ள ஜான் பாண்டியன், தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கும் வேளையில், பாஜகவின் கடும் எதிர்ப்பாளரான விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வாழ்த்து வெறும் நட்பு ரீதியிலானதா அல்லது தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால் தவெக பக்கம் சாயும் ஒரு மறைமுகத் திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஜான் பாண்டியனின் இந்தத் திடீர் நகர்வு பாஜக தலைமைக்கும், தமிழக அரசியல் களத்திற்கும் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
