சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவன் கஞ்சா எடுத்து வந்த அதிர்ச்சி சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். மாணவர்களின் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக்கத்தியும் புழங்கும் நிலையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று விழா எடுப்பதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதற்குக் காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்றும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.