ஜப்பானின் கோபேயில் (Kobe) அண்மையில் நடைபெற்ற கைப்பந்து ‘ஆல் ஸ்டார்’ போட்டியின் போது, ஜப்பானிய அணியின் நட்சத்திர வீரரான 26 வயது நிஷிடா (Nishida), அரைநேர சர்வீஸ் சவாலில் பங்கேற்றார்.

அப்போது அவர் இடது கையால் அடித்த பந்து, எதிர்பாராத விதமாக அவருக்குப் பின்னால் நின்றிருந்த பெண் நடுவரின் மீது பலமாகத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நிஷிடா, ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த நடுவரிடம் ஓடிச் சென்று, ஜப்பானிய கலாச்சாரப்படி தரையில் மண்டியிட்டு, குனிந்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

“>

 

தவற்றினை உணர்ந்து அவர் காட்டிய அந்த அதீத பணிவு மற்றும் மரியாதை காண்போரை நெகிழ வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 8.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகிற்குப் பண்பு குறித்த பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ஆட்டத்தில் கவனம் சிதறாமல் விளையாடிய நிஷிடா, தனது அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்து போட்டியின் ‘ஆட்டநாயகன்’ (MVP) விருதையும் தட்டிச் சென்றார்.