இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காகச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள், அவ்வப்போது வினோதமான வீடியோக்களைப் பகிர்ந்து வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் மாணவன் ஒருவன் தனது விடுதி அறையை (Hostel Room) காலி செய்யும் கடைசி நாளில் செய்துள்ள சேட்டை இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், மாணவன் ஒருவன் தனது அறையில் உள்ள கட்டிலின் மேல் மற்றொரு கட்டிலை அடுக்குவதாகவும், பீரோவை வாசலுக்கு நேராக வைத்துவிட்டு மற்றொரு வாசல் வழியாக வெளியேறப் போவதாகவும் தனது விசித்திரமான திட்டங்களை விவரிக்கிறான்.
Yeh sab kar ke kya milta hai 🤦🏻♀️ pic.twitter.com/rpTwqpVTch
— Zoya Khan (@Zoyakhan7025) February 2, 2026
“>
மேலும், மெத்தைகளை மொட்டை மாடியில் போட்டுவிட்டு, மின்விசிறியை ஒரு நண்டைப் போல மாற்றப் போவதாகவும் அவன் கூறும் காட்சிகள் பார்ப்போரைத் தலைசுற்ற வைக்கின்றன. “இதை அறையாகக் கொடுத்தார்களா அல்லது பாழடைந்த கட்டிடமாகக் கொடுத்தார்களா எனப் பார்க்கும் உரிமையாளர் அதிர்ச்சியடைய வேண்டும்” என்பதே அவனது நோக்கமாக உள்ளது.
@Zoyakhan7025 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், “இவன் நிஜமாகவே பைத்தியமாகிவிட்டானா?” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
