சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், கையும் களவுமாகப் பிடிபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. செல்போனைப் பறிக்கத் திருடன் கை நீட்டிய நொடியில், பேருந்திற்குள் இருந்த பயணிகள் மின்னல் வேகத்தில் அவனது கையைப் பிடித்துக் கொண்டனர்.

இதனால் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, திருடனின் பாதி உடல் வெளியேயும் பாதி உடல் உள்ளேயும் என அந்தத் திருடன் உயிருக்கு அஞ்சித் தொங்கியபடி வந்துள்ளான். தன்னை விடுவிக்குமாறு அவன் எவ்வளவோ கெஞ்சியும், பயணிகள் பிடியை விடாமல் பேருந்து நிறுத்தத்தை அடையும் வரை அவனை அப்படியே கொண்டு சென்றனர்.

​பேருந்து நின்றதும் கீழே இறங்கிய ஆவேசமடைந்த பயணிகள், அந்தத் திருடனுக்கு அங்கேயே தர்ம அடி கொடுத்துள்ளனர். “கஷ்டப்பட்டு உழைப்பவனின் போனைத் திருட உனக்கு எவ்வளவு தைரியம்?” என அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தடியடி மற்றும் அறை கொடுத்ததில் அந்தத் திருடன் விழிபிதுங்கிப் போனான்.

எக்ஸ் தளத்தில் @gharkekalesh என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் சரியான பாடம்”, “இன்ஸ்டன்ட் கர்மா என்பது இதுதான்” எனத் திருடனுக்குக் கிடைத்த தண்டனையை வரவேற்றுக் கமெண்ட் செய்து வருகின்றனர்.