இன்றைய காலக்கட்டத்தில் சிறிய பூச்சிகளைக் கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடும் நிலையில், ஒரு சிறுவன் காட்டில் இருந்து ஒரு கட்டுப் பாம்புகளைத் தனது தோளில் சுமந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் காண்போரை அதிர வைத்துள்ளது. அந்த வீடியோவில், காட்டில் இருந்து விறகுகளைச் சுமந்து வருவது போல, எவ்வித அச்சமும் இன்றி உயிருள்ள பல பாம்புகளைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தச் சிறுவன் வீட்டிற்கு வருகிறான். வீட்டிற்கு வந்ததும், தன் தோளில் இருந்த விஷத்தன்மை கொண்டதாகத் தோன்றும் அந்தப் பாம்புகளை இறக்கி, வீடியோ எடுப்பவரிடம் எதார்த்தமாகக் காட்டுகிறான். இதைக் கண்ட அந்தச் சிறுவனின் தாய், பயத்தில் அலறுவதும் அந்த வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அச்சத்திலும் ஆச்சரியத்திலும் உறைந்து போய் உள்ளனர். “பாம்புகளைப் பொம்மை போல இந்தச் சிறுவன் கையாளும் விதம் திகைக்க வைக்கிறது” என்றும், “இவ்வளவு தைரியம் ஒரு குழந்தைக்கு இருப்பது ஆபத்தானது” என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்தச் சிறுவன் பாம்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு வீடியோ எடுப்பவரை நோக்கிச் செல்ல, அவர் பயந்து பின்வாங்குவது அந்த வீடியோவின் உச்சக்கட்ட பரபரப்பாக உள்ளது. இந்த வினோதமான மற்றும் த்ரில்லர் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
