உத்தரப்பிரதேச மாநிலம் பदायूं (Badaun) பகுதியில், வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றுடன் பெண்மணி ஒருவர் பேச முயலும் வினோதமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்மணி, அந்தப் பாம்பு தன்னிடம் ஜாடைகாட்டிப் பேசுவதாகவும், நாக தேவதை தன் மீது அதீத அன்பு கொண்டு நேரில் பிரசன்னமாகி இருப்பதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார். அறிவியல் வளர்ந்த இந்த காலத்திலும், பாம்பை ஒரு தெய்வமாக நினைத்து அதனுடன் உரையாடுவதாக அந்தப் பெண் கூறும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பாம்பின் அருகே எந்தவித அச்சமும் இன்றி அந்தப் பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். “இது மிகப்பெரிய மூடநம்பிக்கை, உயிருக்கு ஆபத்தான காரியம்” என்று ஒரு தரப்பினரும், “அவரது பக்தி ஆச்சரியமாக இருக்கிறது” என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பாம்பின் அசைவுகளைத் தெய்வீகச் செயலாகக் கருதி அந்தப் பெண் செய்த இந்தச் செயல், தற்போது ஒரு வினோதச் சம்பவமாகப் பேசப்பட்டு வருகிறது.