பெங்களூரு பன்னேருகட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் 24 வயதான கைலாஷ் என்ற இளைஞர் நான்கு பேரால் வழிமறிக்கப்பட்டு, அவரிடமிருந்து ₹31 லட்சம் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ‘உடான்’ நிறுவனத்தில் பணியாற்றும் கைலாஷ், பல்வேறு கிளைகளில் இருந்து மொத்தம் ₹31,38,625 பணத்தைச் சேகரித்துத் தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார்.

அப்போது இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள், கைலாஷை வழிமறித்து அரிவாளால் மிரட்டித் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது ஸ்கூட்டருடன் தப்பிச் சென்ற திருடர்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வண்டியை விட்டுவிட்டு அதிலிருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பன்னேருகட்டா போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.