மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள அரசுப் பழங்குடியின விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு காய்கறி விநியோகம் செய்ய வந்த அல்தாஃப் என்ற இளைஞர், கடந்த 2025-ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுதான், அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதுவரை தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த அந்தச் சிறுமிக்கு, தற்போது குழந்தை பிறந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்ட நிலையில், விடுதி கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அல்தாஃப் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது உரிய ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.