இன்றைய இளைஞர்களுக்கு பைக் ஸ்டண்ட் செய்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்து வருகின்றனர்.

வைரலாகும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் தனது நண்பரை பின்னால் அமர வைத்துக்கொண்டு, பைக் மற்றும் காரை சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் வளைத்து வளைத்து (Zic-Zac) ஓட்டுகிறார்.

பிஸியான சாலையில் அதிவேகமாகச் செல்லும் அந்த பைக், எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கலாம் என்ற நிலையில் உள்ளது. “இப்படிப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் கூட கிடைக்கக்கூடாது” என்று மக்கள் ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு சிறிய தவறு நடந்தால் கூட, பைக்கில் இருப்பவர்களின் உயிர்போகும் அபாயம் உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “யமராஜனிடமிருந்து தப்பிக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.