சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தண்ணீரில் நனைத்தாலும் அணையாத ஒரு பிரத்யேகமான தீக்குச்சியை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக ஒரு தீக்குச்சி லேசான காற்றில் அல்லது சில சொட்டு தண்ணீரில் அணைந்துவிடும்.

ஆனால், இந்த  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தீக்குச்சி, தண்ணீரில் முழுமையாக மூழ்கி எடுத்த பின்னரும் கூட தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இந்த புதுமையான கண்டுபிடிப்பு, எமர்ஜென்சி காலங்களிலும், மழையில் சிக்கிக்கொள்ளும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meemlogy (@meemlogy)

“>

இந்த வீடியோவில் அந்த நபர், சாதாரண தீக்குச்சியின் நுனியில் சில வேதியியல் பொருட்களைச் சேர்த்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தீக்குச்சியைப் பற்றவைத்த பிறகு, அதைத் தண்ணீருக்குள் பலமுறை நனைத்தாலும் அதன் சுடர் குறையாமல் பிரகாசமாக எரிகிறது.

மேலும் கடினமான சூழலில் கூட நெருப்பைப் பராமரிக்கும் இந்த எளிய புத்திசாலித்தனமான நுட்பம், இந்தியர்களின் கைதேர்ந்த  திறமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும், “இது ஒரு மர்மமான மேஜிக் போல இருக்கிறது” என்றும், இந்த யோசனைக்கு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.