தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியில் தற்பொழுது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என மிக ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய அரசியல் சூழ்நிலையால் திமுக தற்பொழுது தனித்துவிடப்பட்டாலும் கூட அதைப் பற்றி தங்களுக்கு எவ்வித பயமும் இல்லை என்று அவர் மிக ஆணித்தரமாகப் பேசி சவாலடித்துள்ளார். ​கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது கூட்டணியில் இருந்து தங்களோடு இணைந்து பணியாற்றிய இடதுசாரி தோழர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, அவர்களின் திடீர் விலகல் குறித்து அதிரடியான சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இத்தனை காலம் ஒற்றுமையாக இருந்துவிட்டு, திடீரென ஒரே நாளில் இடதுசாரிகளுக்கு அப்படி என்ன மன சங்கடம் ஏற்பட்டது என்பது குறித்து அவதிப்படும் நெட்டிசன்களும், ஊடகங்களும் அதை அவர்களிடம்தான் போய் கேட்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.