தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுங்கட்சியினரையும் மற்ற அரசியல் கட்சிகளையும் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாகப் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா?” என சவால் விடுத்தார்.

இதனால் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அரசு ஊழியர்கள் பலரும் வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், பொங்கல் பரிசு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களுக்குப் பணம் வழங்கப்படுவது மறைமுகமாக வாக்குகளை விலைக்கு வாங்கும் செயலாகும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தனது கட்சியின் கொள்கைகளுக்கு யாரும் மாற்றாக இல்லை என்றும், தனக்குக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் எவ்வித பண விநியோகமும் இன்றி மக்கள் தன் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்தவை என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடுள்ளார்.

இந்நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் குழப்பமின்றி நாம் தமிழர் கட்சி தனித்தே பயணிக்கும் என்பதை உறுதிபடக் கூறினார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது நிலைப்பாடுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், கொள்கை ரீதியான தெளிவு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.